வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது.!
கொழும்பு – கொள்ளுப்பிட்டி, நிமல்கா கார்டன் பகுதியில், சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 540 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 35 வயதுடைய சீன நாட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு தெற்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.