வெஸ்டர்ன் தோட்ட எகடன் பிரிவிற்கு செல்லும் பிரதான சாலையில் அடிக்கடி மழை வெள்ளம்!
கண்டி மாவட்ட நாவலப்பிட்டி பஸ்பாகே கோரலை பகுதியில் உள்ள வெஸ்டர்ன் தோட்ட எகடன் பிரிவிற்கு செல்லும் பிரதான சாலையில் அடிக்கடி மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக அவ் வீதியில் செல்லும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் தோட்ட தொழிலாளர்கள் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது மத்திய மலைநாட்டில் கண்டி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அடிக்கடி இந்த வீதியில் பாரிய அளவில் வெள்ள நீர் பாய்ந்து செல்வதால் அப் பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து மத்திய மாகாண ஆளுநர் மற்றும் அப் பகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் நாவலப்பிட்டி பஸ்பாகே கோரலை அரசாங்க அதிபர் மற்றும் நாவலப்பிட்டி நகர சபை முதல்வர் முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.