குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!
குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட, முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வானது நேற்றையதினம் யாழ்ப்பாணம் – நாவாந்துறையில் முன்னெடுக்கப்பட்டது.
17 ம் ஆண்டு நினைவிற்கான இன அழிப்பு வாரத்தின், 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பட்டிணியாலும் பசியாலும் மக்கள் வாடிக்கொண்டிருந்த போது, இருந்த அரிசியை கஞ்சியாக சமைத்து மாண்டவர் போக மீதி மக்களின் உயிரைக் காப்பாற்றிய உப்பிலாக் கஞ்சியினை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் முகமாக இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ். நண்பர்கள் வட்டமும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.