உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கடந்த ஆறு மாதங்களாகக் கூடாரம் தான் வாழ்க்கை பாதுகாப்பான இடம் கோரும் அலகல தோட்ட மக்கள்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
33 பார்வைகள்

கடந்த 6 மாதங்களாகக் கூடாரங்களில் வாழ்கின்றோம். அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றோம். எனவே, பாதுகாப்பான இடத்தில் காணி வழங்கி, தற்காலிக வீடுகளையாவது விரைவில் அமைத்துத் தருமாறு கோருகின்றனர்.

இவ்வாறு நுவரெலியா மாவட்டம், ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அலகல தோட்டம், 508/B கோணக்கலை பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து கூடாரங்களில் வாழும் குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

15 குடும்பங்கள் தற்போது வாழும் கூடாரம் மற்றும் டிட்வா பேரிடரின் போது அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டிட்வா புயலின் பின்னர் வீடுகளை இழந்து தவிக்கும் இம் மக்கள் தங்களது நாளாந்த கடமைகளை நிறைவேற்ற முடியாது உள்ளனர்.

குறிப்பாக கழிவறை வசதிகள் சுத்தமான குடிநீர் , பிள்ளைகள் படிப்பதற்கு வசதி இல்லை போன்ற பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடந்த ஆறு மாதங்களாக குடிசை மற்றும் கொட்டில் களில் தங்களது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல நிலையில் உள்ளனர். இவர்களுக்கு நிரந்தர இல்லங்கள் அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

65 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0