உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அரசியல், சினிமா ஆய்வுகளின் ‘பேனா முனை’ ஓய்ந்தது!!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

இலங்கையின் மூத்த ஆங்கில ஊடகவியலாளரும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற அரசியல் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்ற செய்தி ஊடகத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசியல், இனப்பிரச்சினை மற்றும் புவிசார் அரசியல் விவகாரங்களை மிக நுணுக்கமாக ஆய்வு செய்து எழுதுவதில் இவர் தனித்துவமானவர். அதேவேளை, தமிழ் சினிமா மற்றும் அதன் வரலாற்றுப் பின்னணிகள் குறித்த இவரது கட்டுரைகள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.

இவர் ‘தி ஐலண்ட்’, ‘டெய்லி மிரர்’, ‘டெய்லி எஃப்.டி’ உள்ளிட்ட இலங்கையின் முன்னணி ஆங்கில நாளிதழ்களில் நீண்டகாலமாகப் பத்திகளை எழுதி வந்தார். தனது பிரத்தியேக அரசியல் இணையத்தளத்தினூடாக உலகளாவிய ரீதியில் இலங்கை விவகாரங்களைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வந்தார்.

இவரது ஆழமான அரசியல் பார்வைகள் மற்றும் விரிவான தரவுகள் சர்வதேச மட்டத்திலும் ஆய்வாளர்களால் உற்றுநோக்கப்பட்டவை. அன்னாரின் மறைவு குறித்துத் தகவல் அறிந்த அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இவரது இறுதிச் சடங்குகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் குறித்த விவரங்கள் குடும்பத்தினரால் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயராஜ்ஜின் மறைவு இலங்கை ஊடகத்துறைக்கும், குறிப்பாக அரசியல் ஆய்வுத் துறைக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

64 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0