உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நீர்த் தடாகத்தில் மூழ்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு..!!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள நீர்த் தடாகத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பருத்தித்துறை, புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த திலீபன் சந்தோஷ் (வயது 16) என்ற சிறுவன், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தனது குடும்பத்தினருடன் வல்வெட்டித்துறையில் உள்ள நீர்த் தடாகத்துக்கு நீராடச் சென்றுள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற சிறுவன், நீருக்குள் மூழ்கியுள்ளார்.

உயிரிழந்த சிறுவன் சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையின் மறைவுக்குப் பின் தாயாரின் அரவணைப்பிலேயே வளர்ந்து வந்த நிலையில், இந்த அகால மரணம் அந்தத் தாயையும் உறவினர்களையும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

64 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0