மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு.!
கல்கிஸ்சை, படோவிட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கல்கிஸ்சை, பதோவிட்ட பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த வீட்டில் தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படும் இந்த நபரின் கழுத்துப் பகுதியில் சிறிய வெட்டுக் காயம் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கல்கிஸ்சை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.