உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வடக்கு, கிழக்கில் ஊழல் செய்த அதிகாரிகளை அரசு கைது செய்யாது அவர்களை மிரட்டி கட்சி அரசியலை செய்கிறது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
39 பார்வைகள்

வடக்கு, கிழக்கில் ஊழல் முறைகேடுகளை செய்த அரச அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைது செய்யாது அவர்களை மிரட்டி நிர்வாக விடயங்களில் தமது கட்சி சார்ந்தவர்களுக்கு சலுகைகள் வழங்கி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊழல் முறைகேடுகளை ஒழிக்கப் போகிறோம் என வாக்குறுதி வழங்கி வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பல முறைகேடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

தெற்கில் ஒரு சிலரை கைது செய்தாலும் வடக்கு கிழக்கிலுள்ள ஊழல் அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைது செய்யாது.

அதற்கு வலுவான காரணம் இருக்கிறது அதாவது வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தி எதிர்பார்த்த மக்கள் ஆணை வராத நிலையில் ஊழல் அதிகாரிகளை வைத்து தமது கட்சி சார்ந்தவர்களின் நலனை பாதுகாப்பதே அவர்களின் திட்டம்.

கடந்த தேர்தலில் யாழ். தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தியினர் சுமார் 80 ஆயிரம் வாக்குகளை பெற்று மூன்று ஆசனங்களை பெற்றார்கள்.

உண்மையில் கடந்த காலங்களில் அரசாங்கக் கட்சிகளுக்கு தொடர்ச்சியாக வாக்களிக்கும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் வழங்கி வந்த வாக்குகளில் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் குறைவாகவே தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்தது.

தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒற்றுமை அற்றத்தன்மை கடந்த தேர்தலில் வாக்குகள் சிதறடிக்கப்பட்டமையால் தேசிய மக்கள் சக்தியினரால் மூன்று ஆசனங்களை பெற முடிந்ததே உண்மையான விடயம்.

வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தியினரை தமிழ் மக்களை நம்ப மாட்டார்கள் என்பது நன்கு தெரிந்த நிலையில் வடக்கு, கிழக்கில் உள்ள ஊழல் அதிகாரிகளை அவர்களின் கோப்புக்களை விசாரணைக்கு எடுக்கப் போகிறோம் என அச்சுறுத்தி தமது அரசியல் செயல்பாடுகளை செய்து வருகிறார்கள்.

வட மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றத்தில் பல முறைகேடுகள் இடம்பெற்றமை ஆதாரத்துடன் வெளிவந்த நிலையில் அதனை மூடி மறைத்து வலுக்கட்டாயமாக ஆசிரியர் இடமாற்றங்களை மேற்கொள்வதற்கு இங்கு உள்ள ஊழல் அதிகாரிகளை பயன்படுத்துகிறார்கள்.

ஒரு ஆசிரியர் தனது ஆசிரியர் சேவையில் ஏற்கனவே கஷ்டப் பிரதேசம் ஒன்றில் சேவையாற்றிவிட்டு தனக்கு விரும்பிய இடத்தில் பணி இடமாற்றம் பெற்ற போதும் அவர்களை மீண்டும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்புகிறார்கள்.

அதுமட்டுமல்லாது யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச சபை ஒன்றில் எமது கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்த நிலையில் அவர்களுக்கான உறுப்பினர்களை இதுவரை நியமிக்க தேர்தல் ஆணையம் கடிதம் தர மறுக்கிறது.

குறித்த உறுப்பினர்களுக்கான பதில் உறுப்பினர்களை நியமிப்பதற்கு எந்த ஒரு நீதிமன்றமும் தடை ஏற்படுத்தவில்லை இவ்வாறான ஒரு நிலையில் யார் தடுப்பது இதற்கு பின்னால் ஊழல் அதிகாரிகள் செயற்படுகிறார்கள்.

வடக்கில் தமிழ் மக்கள் சார்ந்த சபை ஒன்று திறம்பட இயங்கக்கூடாது என்ற ஜே.வி.பியின் இனவாத சிந்தனை தான் இதற்குப் பிரதான காரணம்.

தெற்கில் இடம்பெறும் நிலைமைகள் வேறு வடக்கு, கிழக்கில் இடம்பெறும் நிலைமைகள் வேறு இதனை தமிழ் மக்கள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆகவே தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும் வடக்கு, கிழக்கில் உள்ள ஊழல் அதிகாரிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தாமல் தம்வசம் வைத்துக் கொண்டு நிர்வாக விடயங்களை குழப்புவதும் பழி வாங்குவதுமே இந்த அரசாங்கத்தின் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

69 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0