இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு.!
குருநாகல், நாரம்மலை பிரதேசத்தில் இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நாரம்மலை வீதியில் நேற்று சனிக்கிழமை மாலை இரண்டு உந்துருளிகள் மிக அதிவேகமாகப் பயணித்துள்ளன. இதன்போது, ஒரு உந்துருளி மற்றொன்றுடன் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்த இரண்டு உந்துருளிகளின் ஓட்டுநர்களும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி 26 வயதுடைய இளைஞன் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு நபரான 29 வயதுடைய இளைஞன், ரயில்வே திணைக்களத்தில் பணியாற்றுபவர் என்பதுடன் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.