உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

குடும்பத் தகராறில் தம்பியை கொ*லை செய்த அண்ணன்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

கம்பஹா, கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற குடும்பத் தகராறு ஒன்றின் போது, அண்ணன் தனது தம்பியை வாளால் வெட்டிப் படு கொலை செய்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை கந்தானை பகுதியில் இந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அண்ணன் மற்றும் தம்பி ஆகிய இருவருக்கும் இடையே நீண்டகாலமாகத் தகராறு நிலவி வந்ததாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில், நேற்று ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த அண்ணன் தம்பியை வாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த 27 வயதுடைய இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பாக மூன்று பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய அண்ணனைக் கந்தானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0