பாரவூர்தி மோதி பௌத்த தேரர் உயிரிழப்பு.!
பேராதனை – ரஜவத்தை வீதி பகுதியில் நேற்று சனிக்கிழமை (16) பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் பௌத்த தேரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேராதனையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று வீதியைக் கடக்க முயன்ற தேரர் மீது மோதியதில் படுகாயமடைந்த தேரர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் போவலவத்தை பகுதியிலுள்ள ஆச்சிரமம் ஒன்றில் வசித்து வந்த 83 வயதுடைய தேரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.