உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அநுர ஆட்சி தொடர்ந்தால் நாடு மீண்டெழ முடியாத பாதாளத்துக்குச் செல்லும்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

“அநுர அரசிடம் முறையான பொருளாதாரத் திட்டங்கள் இல்லாததால் நாட்டு மக்கள் மிக வேகமாக வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். இந்த ஆட்சி தொடர்ந்தால், நாடு மீண்டெழ முடியாத பாதாளத்துக்குச் சென்றுவிடும்.” – இவ்வாறு சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த ஒன்றரை வருடங்களாக நாட்டின் பொருளாதாரம் எவ்வித வளர்ச்சியும் அடையவில்லை. அரசு மூலதனச் செலவுகளைக் கடுமையாகக் குறைத்துள்ளதால், சந்தையில் பணப்புழக்கம் அற்றுப் போய் பொருளாதாரம் மேலும் சுருங்கி வருகின்றது.

இளைஞர்களுக்கு மலிவு விலையில் வாகனங்களைத் தருவோம் எனக் கூறிவிட்டு, விலையுயர்ந்த வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதித்ததன் மூலம் டொலர் கையிருப்பு வீணடிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் சரிந்து வருகின்றது. இது உற்பத்தி மற்றும் நுகர்வுத் துறையைப் பாரிய அளவில் பாதித்துள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளத்துக்கு நிகராக மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றனர்.

அரசு சர்வதேச நாணய நிதியம் போன்ற வெளிநாட்டு சக்திகளின் ஆலோசனைகளை மட்டுமே கேட்டுச் செயற்படுகின்றது.

கடன் கொடுத்தவர்களைத் திருப்திப்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் இந்த அரசு, நாட்டு மக்களின் வாழ்வாதாரம் குறித்துச் சிந்திப்பதில்லை.

முறையான பொருளாதாரத் தத்துவமோ அல்லது மூலோபாயத் திட்டமோ இல்லாத இந்த ஆட்சி தொடர்ந்தால், நாடு மீண்டெழ முடியாத பாதாளத்துக்குச் சென்றுவிடும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

70 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0