கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் பாடுகாயமடைந்துள்ளனர்
நேற்று (16) மாலை வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்றும் கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த கன்டர் வாகனமும் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




