உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அதிகார து*ஷ்பிரயோகத்தால் சிறு வணிகர்களுக்குப் பாதிப்பு இ.போ.ச. தலைவருக்கு எதிராகப் பெலவத்தையில் முறையீடு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
21 பார்வைகள்

இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவருக்கு எதிராக எழுந்துள்ள பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கைகள் குறித்து, சுயதொழில் செய்பவர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்லஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “பஸ் நிலைய மறுசீரமைப்புப் பணிகளின் போது, தரமற்ற பொருள்களைப் பயன்படுத்தி அதன் மூலம் போக்குவரத்துச் சபை தலைவர் பெருமளவு கொமிஷன் பெற்றுக்கொண்டுள்ளார். அத்துடன், பஸ் நிலையத்திலுள்ள தற்போதைய கடைகளை அகற்றிவிட்டு, தனது ஆதரவாளர்களுக்கு அவற்றைப் பகிர்ந்தளிக்க அவர் தன்னிச்சையாகச் செயற்படுகின்றார்.” – என்றார்.

பஸ் நிலைய உணவகத்தின் நீர் மற்றும் மின்சார விநியோகத்தை அநியாயமாகத் துண்டித்தமை தொடர்பாகத் தொடரப்பட்ட சிவில் வழக்கில், போக்குவரத்துச் சபைத் தலைவரும் நிறைவேற்று அதிகாரியும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது, நீதிமன்றம் அவர்களுக்குப் பிணை வழங்கியுள்ளது.

“அரசின் கொள்கைகளுக்கு மாறாகச் செயற்படும் இவ்வாறான ஊழல் அதிகாரிகளின் விவரங்களை நாங்கள் சும்மா விடமாட்டோம்” என்று தெரிவித்த பிரதீப் சார்லஸ், இவரின் அனைத்து முறைகேடுகளையும் ஆதாரங்களுடன் ‘பெலவத்தை’யின் (ஜே.வி.பி. தலைமையகம்) கவனத்திற்குக் கொண்டு செல்லவுள்ளதாகக் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

தன்னிச்சையான அதிகார துஷ்பிரயோகங்கள் மூலம் சிறு வணிகர்களைப் பாதிக்கும் வகையில் செயற்படும் இத்தகைய உயர் அதிகாரிகளுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0