உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இறக்காமம் பிரதேச உணவகங்களில் அதிரடிச் சோதனை!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி இரவு அதிரடிச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற பெருமளவிலான உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன், தரமற்ற சமையல் பாத்திரங்களும் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனையின் பேரில், இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரியின் நேரடி வழிகாட்டலில் இந்த விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர் தலைமையிலான குழுவினர், இப்பகுதியிலுள்ள 12 உணவகங்களை சோதனைக்கு உட்படுத்தினர். இதன்போது, சமையலறைகளின் தூய்மை, உணவுப் பொருட்கள் சேமிக்கப்படும் முறைகள் மற்றும் உணவு கையாளுபவர்களின் சுகாதார நடைமுறைகள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டன.

இந்த ஆய்வின்போது, மனித நுகர்வுக்கு தகுதியற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான உணவுகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன், உணவு தயாரிப்பதற்குப் பொருத்தமற்ற மற்றும் சுகாதார சீர்கேட்டை விளைவிக்கக்கூடிய நிலையில் காணப்பட்ட ஒரு தொகுதி சமையல் பாத்திரங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த சோதனையின்போது உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா, இறக்காமம் மற்றும் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0