உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பாண்டியன் வீதிப் பாலத்தை விரைவாக சீரமைப்பதுடன், பாதுகாப்பு ஏற்பாட்டையும் மேற்கொள்க; ரவிகரன் எம்.பி வலியுறுத்து!!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

டிட்வா பேரிடர் காலத்தில் சேதமாகியுள்ள முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாண்டியன் வீதிபாலத்தை விரைவாகச் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், சேதமடைந்துள்ள பாலத்தைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடொன்றைச் செய்யுமாறும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியியலாளரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த பாண்டியன் வீதிப் பாலத்தின் சீரமைப்புப் பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படுமெனப் பதிலளித்த வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியியலாளர், தற்போது சேதமடைந்தநிலையிலும் பாதுகாப்பற்ற வகையிலும் காணப்படும் பாண்டியன் வீதிப் பாலத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்துழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையின் அருகில் பாண்டியன் வீதிப் பாலம் கடந்த தித்வா பேரிடர் காலத்தில் உடைப்பெடுத்திருந்தது.

குறித்த பாலமானது பாடசாலைக்கு அருகிலும், புதுக்குடியிருப்பு நகரை அண்டிய பகுதியிலும் இருப்பதால் அப்பாலத்தினை சீரமைப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்தோடு இந்தப் பாலத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கை எந்தக்கட்டத்தில் இருக்கின்றது என்பதையும் வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் – என்றார். இந்நிலையில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பொறியியலாளர் இதன்போது பதிலளிக்கையில், ஏற்கனவே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதுடன், பொருத்தமான ஒருவரைத் தேர்வுசெய்து இந்த வேலைக்கான ஒபந்தமும் செய்யப்பட்டது.

ஆனால் அதனைத் தொடர்ந்து பொருட்களின் விலைகள் அதிகரித்ததால், ஒப்பந்ததாரர் இந்த வேலையை எடுத்துச்செய்ய மறுப்புத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வேலைக்குரிய மதிப்பீட்டு அறிக்கையில் சில திருத்தங்களை மேற்கொண்டு, மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

அந்தற்கமைய இந்த வேலையை பொருத்தமான ஒருவரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்ட பிற்பாடு, விரைவாக அந்தப் பாலத்தின் சீரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படுமென வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியியலாளரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பாலத்தின் சீரமைப்பு வேலைகளை ஆரம்பிப்பதற்கு இன்னும் எவ்வளவு காலம் தேவைப்படுமென இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரால், வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியியலாளரிடம் வினவப்பட்டது. அத்தோடு அருகிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கும், வீதியால் பயணிப்போருக்கும் ஆபத்தினை ஏற்படுத்துகின்ற விதத்தில் அமைந்துள்ள அந்த சேதமடைந்த பாலத்தைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடு ஒன்றை விரைவாக மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது வலியுறுத்தினார்.

அந்தவகையில் இந்த பாலத்தின் சீரமைப்பு வேலைகள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படுமென வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பொறியியலாளரால் தெரிவிக்கப்பட்டதுடன், விரைவில் சேதமடைந்த பாலத்தினைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாட்டை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0