உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஜனாதிபதியின் விஜயம் தொடர்பான முன்னாயத்த பணிகள் தீவிரம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
26 பார்வைகள்

நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பித்து வைக்கும் நோக்கில்  ஜனாதிபதி   எதிர்வரும் வாரத்தில் நிந்தவூருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதனையடுத்து ஜனாதிபதியின்  வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி  ஜனாதிபதி செயலக அதிகாரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர், மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளூராட்சி ஆணையாளர், இலங்கை பொலிஸ் அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், பிரதேச செயலாளர், உள்ளிட்ட உயரதிகாரிகள் நிந்தவூர் கலாச்சார மண்டபத்திற்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை நேரில் பார்வையிட்டனர்.

இதன்போது, கலாச்சார மண்டபத்தின் தற்போதைய நிலை, மீள ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் மற்றும் ஜனாதிபதி அவர்களின் விஜயத்துடன் தொடர்புடைய ஏற்பாடுகள் குறித்து விரிவான கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருந்தன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0