உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
19 பார்வைகள்

ஆகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்கான எரிபொருள் தேவைக்கான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் ஆறாவது கூட்டம் இன்று (15) கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற போது, அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளதாக அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, வருங்காலத்தில் எரிபொருள் சலுகைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும், தற்போது நடைமுறையிலுள்ள இலக்கத் தகடுகளின் ஒற்றை மற்றும் இரட்டை முறையை நீக்கி, QR குறியீட்டின் கீழ் எரிபொருளை வழங்குதல் மற்றும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

மின்சாரப் பயன்பாட்டை நிலையான முறையில் முகாமைத்துவம் செய்வதை நோக்கமாகக் கொண்டு, ‘Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தும் வீடுகளைத் தெரிவு செய்து மாணவர்களை மதிப்பீடு செய்தல் மற்றும் மாணவர்கள் ஊடாக மின்சார சேமிப்பு முறைகளை ஊக்குவித்தல் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

மேலும், எதிர்கால கட்டுமானங்களின் போது ‘பசுமை கட்டிடம்’ எனும் எண்ணக்கருவை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

அரசாங்கம் வலுசக்தித் துறையை முறையாக முகாமைத்துவம் செய்வதன் காரணமாக, மக்கள் தற்போதைய நெருக்கடி குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஏனைய நாடுகளில் எரிபொருள் வரிசைகள் மற்றும் மின்வெட்டு ஏற்பட்ட போதிலும், தமது அரசாங்கம் இந்த நெருக்கடியை சரியாக முகாமைத்துவம் செய்துள்ளதாக அவர் வலியுறுத்தினார். எனினும், இந்த நெருக்கடி இன்னும் முழுமையாக முடிவுக்கு வராததால், இது குறித்து நாம் தொடர்ச்சியான அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும், நிலையான வலுசக்தி முகாமைத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், எதிர்வரும் வெசாக் வாரத்தில் தடையின்றி மின்சாரத்தை வழங்குவது அவசியம் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0