உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

அரசு செய்த ஊழலுக்கு மக்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
21 பார்வைகள்

அரசின் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளின் சுமையை அப்பாவி மக்கள் மீது சுமத்தக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி உதய கம்மன்பில காட்டமாகத் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எரிபொருள் இறக்குமதியால் ரூபாயின் மதிப்பு வீழ்ந்துள்ளது என்று ஜனாதிபதி கூறுவது ஒரு ‘பச்சைப்பொய்’ என்றும் கம்மன்பில சாடினார்.

“தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் முடங்கியது. அந்தப் பற்றாக்குறையை ஈடுகட்டவே அதிக விலைக்கு டீசல் வாங்கப்பட்டது.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகிலேயே எரிபொருளுக்கு அதிக விலை கொடுத்த நாடு இலங்கைதான் என எச்.எஸ்.பி.சி. வங்கி தரவுகள் கூறுவதைச் சுட்டிக்காட்டிய அவர், விநியோகஸ்தர்களுக்கு அதிக இலாபம் வழங்கியது ஏன்? என்றும் வினவினார்.

“அதிகாரிகளின் ஊழலால் ஏற்பட்ட இழப்பை மக்கள் மீது சுமத்தாமல், அந்தப் பணத்தை அரசு தனது ‘பெலவத்தை கணக்கிலிருந்து’ (கட்சி நிதி) ஈடு செய்ய வேண்டும்” என்றும் அவர் சவால் விடுத்தார்.

தற்போது நிலவும் கடும் மழை மற்றும் வெள்ள அபாயத்தைக் கருத்திற்கொண்டு, பிள்ளைகளின் பாதுகாப்புக்காகப் பாடசாலைகளுக்கு உடனடியாக விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் அரசை வலியுறுத்தினார்.

ஜனாதிபதி அநுரகுமார மற்றும் ரில்வின் சில்வா ஆகியோர் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து முன்கூட்டியே கருத்துத் தெரிவிப்பது சட்டத்தின் ஆட்சியைச் சீரழிக்கின்றது என்றும் கம்மன்பில குற்றம் சாட்டினார்.

“நீதிமன்றத்தின் மீதான இந்த அரசியல் அச்சுறுத்தல் குறித்து, அனைத்து வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் ஆதாரங்களுடன் விளக்கமளிக்கவுள்ளோம்.” என்றும் உதய கம்மன்பில இந்த ஊடகச் சந்திப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணையில் விடுதலை!

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவிபிணையில் விடுதலை! இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க,…

43 0 0
இலங்கை செய்திகள்

ஒரு இறாத்தல் பாண் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு!

450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்தப் புதிய விலை திருத்தமானது…

4 0 0
இலங்கை செய்திகள்

அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தைக் கொ@லை செய்கின்றது அரசு!

இலங்கையில் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் எனப் பெருமை பேசி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, 22ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனநாயகத்தைத் தலைகீழாக மாற்றி வருகின்றது என்று எதிர்க்கட்சித்…

57 0 0
இலங்கை செய்திகள்

மத நல்லிணக்கத்தின் மூலம் சமூகத்தை வலுப்படுத்த புதிய நடவடிக்கை.!

கடந்த ஐந்து ஆண்டுகளாக நுவரெலியா மாவட்டத்தில் மத நல்லிணக்கம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக செயற்பட்டு வரும் நுவரெலியா மாவட்ட சர்வமதக் குழு, அடுத்த…

64 0 0