உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சர்வதேச மோசடிக் கும்பல்களின் புகலிடமாக மாறியுள்ள இலங்கை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

அரசின் முறையற்ற விசா கொள்கையால் இலங்கை சர்வதேச மோசடி கும்பல்களின் புகலிடமாக மாறியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார் .

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“தாராளவாத விசா கொள்கை காரணமாக, கடந்த 5 மாதங்களில் மட்டும் இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்ட 652 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது கடந்த ஆண்டை விட 50 சதவீத அதிகரிப்பாகும். கைது செய்யப்பட்ட பலரது விசா மற்றும் கடவுச்சீட்டுகள் காலாவதியாகியுள்ளன.

வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டும் குறுகிய நோக்கில், நாட்டின் பாதுகாப்பை அரசு அடகு வைத்துள்ளது.” – என்றார்.

விசா கட்டணமின்றி இஸ்ரேலியர்களை அனுமதிக்கும் கொள்கையைச் சுட்டிக்காட்டிய அவர், அறுகம்பை உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளில் அவர்கள் சட்டவிரோத மையங்களை அமைத்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர் என்றும், அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

அரசின் நிர்வாகத் திறமையின்மையை விமர்சித்த அவர், “முன்பு ஜனாதிபதி அரசை ‘மலர்த்தொட்டிகள்’ என்றார். ஆனால் இன்று அந்த மலர்த்தொட்டிகள் யாவும் ‘தொட்டாசிணுங்கி’ செடிகளாக மாறிவிட்டன.” – என்றார்.

“உலகில் எங்கும் இல்லாத விலையான 326 டொலருக்கு ஒரு பேரல் டீசலை அரசு கொள்வனவு செய்துள்ளது. இதன் மூலம் எரிபொருள் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய ஆட்சியின் கீழ் நடந்துள்ள நிலக்கரி ஊழலை மூடிமறைக்கவே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைத்துள்ளார்.

இந்த நிலக்கரி ஊழல் தொடர்பான அனைத்து ஆவணங்களுடன், ஐக்கிய மக்கள் சக்தி அடுத்த வாரம் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்குச் செல்லவுள்ளது என்றும் முஜிபுர் ரஹ்மான் இதன்போது உறுதிப்படத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0