உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை; ஒரே நாளில் 734 பேர் சிக்கினார்கள்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு பூராகவும் போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட விசேட சோதனைகளின்போது 734 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு தழுவிய ரீதியில் ஒரே நாளில் 786 விசேட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதில் போதைப்பொருட்களுடன் 734 பேர் சிக்கினர். தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதன்படி, சந்தேகநபர்களிடமிருந்து 277 கிராம் ஹெரோயின், 451 கிராம் ஐஸ், 2 கிராம் கொக்கெய்ன், 3 கிலோகிராம் 316 கிராம் கஞ்சா, 2 ஆயிரத்து 127 கஞ்சா செடிகள், 2 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 8 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 747 போதை மாத்திரைகள், 466 கிராம் மதனமோதகம் மற்றும் 89 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தத் தேசிய திட்டத்தின் ஊடாக நாட்டின் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை முற்றாக முடக்குவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0