பாரவூர்தியுடன் மோதிய உந்துருளி; ஒருவர் உயிரிழப்பு.!
அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதேனிய – அநுராதபுரம் வீதியில் 36வது மைல்கல் அருகே, உந்துருளி ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அம்பன்பொல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியின் பின்புறத்தில் உந்துருளி மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த உந்துருளி ஓட்டுநர், கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.