உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொ*லை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

அவிசாவளை மற்றும் மாத்தளை ஆகிய இரண்டு பொலிஸ் பிரிவுகளும் நேற்று வியாழக்கிழமை (14) கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுதெனிய பகுதியில் நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கட்டுதெனிய பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கடந்த 13ஆம் திகதி இரவு, குறித்த நபர் மேலும் சிலருடன் கட்டுதெனிய பகுதியில் உள்ள வீடொன்றில், அவ்வீட்டின் காவலாளியுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

இதன்போது காவலாளிக்கும் குறித்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, காவலாளி கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் அந்த நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கட்டுதெனிய பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய சந்தேக நபரான காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவிசாவளை பஸ் நிலையத்துக்கு அருகில் நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு, அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதையடுத்து, சந்தேக நபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய கொஸ்கம பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0