உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’: திருகோணமலையில் புதிய வீடுகள் கையளிப்பு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
26 பார்வைகள்

அரசாங்கத்தின் ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்ட, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கும்புறுப்பிட்டி பகுதியில் வீடற்றவர்களுக்கான வீடுகளைக் கையளிக்கும் மற்றும் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள் இன்று 14 ஆம் திகதி நடைபெற்றது.

​கும்புறுப்பிட்டி, நாவற்சோலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, அதன் பயனாளிக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. வாழைஊற்றுப் பகுதியில் புதிய வீடொன்றை அமைப்பதற்கான முதற்கட்ட அடிக்கல் நட்டு வைக்கப்பட்டது.

​2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இடையில் தடைப்பட்டிருந்த 25 வீடுகளைப் பூர்த்தி செய்வதற்காக, நாவற்சோலை மற்றும் பெரியகுளம் பகுதி பயனாளிகளுக்கு மீண்டும் பணிகளைத் தொடர நிதியுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

​குச்சவெளி பிரதேச செயலாளர் எம். ஆர். சியாஉல் ஹக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர் வீடுகளையும் நிதியுதவிகளையும் பயனாளிகளிடம் கையளித்தனர்.

​இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட தலைவர் விமல் ராஜசிங்க,தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட உதவி பொறியியலாளர் என். கஜேந்திரன், பிரதேச செயலக அதிகாரிகள், தேசிய மக்கள் கட்சியின் பிரதேச இணைப்பாளர், பிரஜா சக்தி தலைவர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

​அரசாங்கத்தின் தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தில் வீடற்ற பல குடும்பங்களுக்கு நிரந்தரக் கூரையை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0