குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி.!
பொகவந்தலாவ கேக்கஷோல் தோட்டத்தில் இன்று (14) மதியம் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது குளவிக் கொட்டுக்கு இலக்காகி 5 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொட்டும் மழையிலும் தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளை தேயிலை செடிகளின் கீழ் பகுதியில் கட்டப்பட்டிருந்த குளவிக்கூடு கலைந்து கொட்டியதில் 35 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்ட ஜந்து பெண்கள் நோயாளிகள் காவு வண்டி மூலம் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.