உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கணேமுல்ல சஞ்சீவ கொ*லை; கம்பஹா ஒஸ்மண்ட் கைது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

பாதாள உலகக் கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ என்பவரைத் திட்டமிட்டு கொலை செய்யவதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், ஒஸ்மண்ட் குணசேகர எனப்படும் “கம்பஹா ஒஸ்மண்ட் ” என்பவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவர் ஆவார்.

2025 பெப்ரவரி 19 ஆம் திகதி, கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்ற மண்டபத்திற்குள் சட்டத்தரணி போல வேடமணிந்து வந்த நபரொருவர், சிறைச்சாலையிலிருந்து அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அவரைக் கொலை செய்திருந்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நேற்று புதன்கிழமை (13) இரவு கம்பஹா, ஸ்ரீ போதி வீதி பகுதியில் வைத்து ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவர்களுடன் இணைந்து இந்தக் கொலைத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இந்தக் கொலையைச் செய்வதற்குத் தேவையான துப்பாக்கிகளை வழங்கியமை மற்றும் ஏனைய உதவிகளை வழங்கியதன் மூலமும் சந்தேக நபர் இந்தச் சதித்திட்டத்தில் நேரடியாகப் பங்கெடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட போது சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரீபீட்டர் ரக துப்பாக்கி ஒன்று, 10 ரவைகள் மற்றும் 2 மகசீன்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு குற்றஒழிப்பு பிரிவினர் இக்கொலைச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

69 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0