உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மன்னாரில் தனது மகளை து*ஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை ; விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
21 பார்வைகள்

மன்னாரில் தனது மகளை பாலியல் து*ஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட  குடும்பஸ்தரை எதிர் வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தனது 14 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவியான குறித்த சிறுமி யை அவரது தந்தையார் து*ஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் பகுதியைச் சேர்ந்த குறித்த  14 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவியான சிறுமிக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர் உடனடியாக மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்திய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வைத்திய பரிசோதனையில் குறித்த சிறுமி து*ஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியமை தெரிய வந்துள்ளது. வைத்தியசாலை நிர்வாகம் வைத்தியசாலை பொலிஸ் ஊடாக மன்னார் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்த நிலையில் மன்னார் பொலிஸார் குறித்த சிறுமியிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

இதன் போது தன்னை தனது தந்தையே து*ஷ்பிரயோகம் செய்துள்ளதாக  குறித்த  14 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவியான சிறுமி  தெரிவித்த நிலையில் அவரை மன்னார் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர். எனினும் தான் குறித்த து*ஷ்பிரயோகத்தை மேற்கொள்ளவில்லை என  தந்தை  தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை குறித்த நபரை மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாக்கிய நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் சிறுமியின் தந்தையான   குறித்த நபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். சிறுமி தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

68 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0