உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

“டிட்வா” புயலால் பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேசத்துக்கு நிவாரணமாக 42 மில்லியன் மாத்திரமே கிடைத்துள்ளது!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
21 பார்வைகள்

“டிட்வா” புயலால் பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 86 மில்லியன் ரூபா நிவாரணம் தேவைப்படுவதாக விபரங்களை அனுப்பி வைத்திருந்தோம். எனினும், அரசாங்கத்திலிருந்து இதுவரை 42 மில்லியன் ரூபா மாத்திரமே கிடைத்துள்ளது. இன்னும்  44 மில்லியன் ரூபா வர வேண்டியுள்ளது என கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் நேற்று முன்தினம் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாதாந்த அமர்வில் தலைமை வகித்துப் பேசும் போது தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு எமது சபையின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன், அவர் மலையகத்துக்கும் தமிழகத்துக்கும் உறவுப் பாலமாக இருக்க வேண்டும்.

கொட்டகலை பிரதேச சபையின் புதிய கட்டிடத்துக்கான நிர்மாணப் பணிகள் 2016 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கபப்ட்டது. கடந்த 10 வருட காலமாக கட்டிடம் பூர்த்தியாகவில்லை. 27 மில்லியன் ரூபா நிலுவை கொந்தரத்துக்காரருக்கு செலுத்த வேண்டியுள்ளது. மேலும் கட்டிட வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கு இன்னும் 6 – 7 கோடி ரூபா தேவைப்படுகின்றது. அத்தோடு பெருந்தொகைப் பணத்தை வங்கிக் கடனுக்கு மாதாந்தம் செலுத்த வேண்டியுள்ளது.

 இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று சுமார் 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்து கொடுக்க முன்வந்துள்ளது. எனவே, அந்தக் கட்டிடத்தை குறிப்பிட்ட நிறுவனத்துக்கு 30 வருடக் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளவும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அதற்காக மத்திய மாகாண ஆளுநரின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. பிரதேச சபை ஏகமனதாக தீர்மானம் எடுக்கும் பட்சத்தில் உடனடியாக வேலைகளை ஆரம்பிக்க உடன்படிக்கை செய்து கொள்ளலாம்.

அத்தோடு, கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உள்ள ஏரியை நகர அபிவிருத்தி சபை குத்தகைக்கு எடுத்து சிறுவர் பூங்கா மற்றும் பொழுது போக்கு வசதிகளோடு சுற்றலாத் தலமாக மாற்றி, பலதரப்பட்டவர்களும் வருகை தரும் போது, பிரதேச சபைக்கு வருமானத்தை ஈட்டிக் கொள்ளக் கூடிய வேலைத் திட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளது.

எமது பிரதேச சபை எல்லைக்குள் சபையின் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கு சபைக்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தை கடந்த காலங்களில் பயனபடுதியுள்ளோம். எனவே, எதிர்காலத்தில் இத்தகையை அத்துமீறல்கள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும், எமது பிரதேச சபை நிர்வாகத்துக்குட்பட்ட பாடசாலைகளில் தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இலவச முன்னோடிப் பரீட்சையை பிரதேச சபையின் ஊடாக எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். 34 பாடசாலைகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறவுள்ளார்கள். மாணவர்களின் வசதி கருதி கொட்டகலை, தலவாக்கலை ஆகிய இரண்டு இடங்களில் முன்னோடிப் பரீட்சை நடத்தப்படவுள்ளது.

மேலும், எமது பிரதேச மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொண்டு பயனடையும் வகையில் “வேர்ல்ட் விசன்” நிறுவனம் 2500 லீற்றர் கொள்ளளவு கொண்ட பவுசர் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

64 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0