யாழில் ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தவருக்கு கடூழிய சிறைத்தண்டனை.!
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பகுதியில் கடந்த 2021 மார்ச் மாதம் 1.44 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை மற்றும் 1 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 13.05.2026 இன்று தீர்ப்பளித்தது.
அத்துடன் தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நீண்டகாலமாக யாழ். மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டவாதி திரு. கா. நசிகேதன் முன்னிலையாகியிருந்தார்.