உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தையிட்டி விகாரையை வைத்து நகர்த்தப்படும் காய்கள்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
40 பார்வைகள்

யாழ். தையிட்டி பகுதியில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையைத் தக்கவைக்க முயற்சிகள் நடப்பதாகத் தெரிவித்து மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 11 ஆம் திகதி தையிட்டிக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் சந்திரசேகரன், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை முறையாக அளவீடு செய்து உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.


இருப்பினும், நிலங்கள் விடுவிக்கப்படும் என்று கூறப்பட்டாலும், சர்ச்சைக்குரிய விகாரை மற்றும் அது அமைந்துள்ள காணி குறித்து எந்தவொரு தெளிவான முடிவும் அறிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மறுபுறம், அந்தச் சட்டவிரோத விகாரையை அரச திணைக்களங்களில் முறைப்படி பதிவு செய்வதற்கான இரகசிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


இந்த நிலையில், அரசின் இந்த இரட்டை வேடத்தைப் புரிந்துகொள்வதற்கும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் நிலங்களை முழுமையாக மீட்டெடுப்பதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராயவும் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


குறித்த கலந்துரையாடலானது, யாழ். மத்திய கல்லூரிக்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வா அரங்கத்தில் எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி புதன்கிழழை மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு நில மீட்புப் போராட்டத்திற்கு வலு சேர்க்குமாறு தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரையினால் நிலமிழந்த தமிழர்கள் சார்பாகப் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

41 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

62 0 0
இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

66 0 0
இலங்கை செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; ஒருவர் கொ*லை.!

தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (28) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் 35 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை…

57 0 0