உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட மதுபான போத்தல்களுடன் இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
48 பார்வைகள்

நீர்கொழும்பு மற்றும் பாதுக்க பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட மதுபான போத்தல்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஸ்க்ரின் மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 67.5 லீற்றர் (90 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் 53 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பாதுக்க, உடுமுல்ல பகுதியில் ஹோமாகம குற்றப் புலனாய்வு பிரிவனரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சட்டவிரோத மதுபானம் தயாரிப்பு நிலையமொன்று முற்றுகையிடப்பட்டது.

இதன்போது 67.5 லீற்றர் காய்ச்சப்பட்ட மதுபானம், மதுபானம் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் 1080 லீற்றர் (06 பீப்பாய்கள்) கோடா என்பன கைப்பற்றப்பட்டன.

இதன்போது பாதுக்க பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த கைது நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

41 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

62 0 0
இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

66 0 0
இலங்கை செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; ஒருவர் கொ*லை.!

தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (28) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் 35 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை…

57 0 0