உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

யாழில் கைத்துப்பாக்கி மீட்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
37 பார்வைகள்

யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளவாலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே அங்கிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்தக் கைத்துப்பாக்கி எதற்காக அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்தது? ஏதேனும் பாரிய குற்றச்செயல்களைப் புரிவதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததா? அல்லது வேறு நபர்களிடமிருந்து கைமாற்றப்பட்டதா? என்பது குறித்துப் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கி மேலதிக ஆய்வுக்காகப் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

65 0 0
இலங்கை செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; ஒருவர் கொ*லை.!

தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (28) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் 35 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை…

55 0 0
இலங்கை செய்திகள்

கனிம வள அகழ்வுக்கு புதிய நடைமுறை.!

மன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிம வளங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையில் நடைமுறைகள் குறித்து விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட…

46 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

64 0 0