உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மரத்துடன் மோதிய உந்துருளி; குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

பதுளை, கிராந்துருக்கோட்டையில் மஹியங்கனை – தெஹியத்தகண்டிய வீதியில் உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று மஹியங்கனை வீதியூடாக உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நாய் ஒன்று வீதியின் குறுக்கே பாய்ந்துள்ளது. இதன்போது நாயுடன் மோதிய உந்துருளி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரம் ஒன்றில் பலமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்த பெண் ஆகிய இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு கிராந்துருக்கோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 55 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் பயணித்த பெண் பலத்த காயங்களுடன் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் குறித்து கிராந்துருக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

65 0 0
இலங்கை செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; ஒருவர் கொ*லை.!

தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (28) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் 35 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை…

55 0 0
இலங்கை செய்திகள்

கனிம வள அகழ்வுக்கு புதிய நடைமுறை.!

மன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிம வளங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையில் நடைமுறைகள் குறித்து விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட…

46 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

64 0 0