உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கடலட்டைகளுடன் சிக்கிய சந்தேகநபர்கள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
49 பார்வைகள்

யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில் கடற்கரைப் பகுதியில் 10 ஆம் திகதி காலை இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக இரவு சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடல் அட்டைகளை கரைக்கு கொண்டு வந்த சுமார் ஆறு (06) நபர்களையும், தொள்ளாயிரத்து முப்பத்தொன்பது (939) கடல் அட்டைகள், இரண்டு (02) படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

அதன்படி, யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில் கடலோரப் பகுதியில் வடக்கு கடற்படை கட்டளையின் வெற்றிலைக்கேணி கடற்படை நிலையத்தால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இரண்டு (02) சந்தேகத்திற்கிடமான சிறுபடகுகள் சோதனையிடப்பட்டன.

அங்கு, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கடல் அட்டைகளைப் பிடித்து கரைக்கு கொண்டு வந்த ஆறு (06) நபர்கள், தொள்ளாயிரத்து முப்பத்தொன்பது (939) கடல் அட்டைகள், இரண்டு (02) சிறுபடகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கடற்படையின் காவலில் எடுக்கப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் காவலில் எடுக்கப்பட்ட சந்தேக நபர்கள், மன்னார் மற்றும் யாழ்ப்பாண வல்வெட்டித்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், 23 முதல் 37 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள், கடல் அட்டைகள் இருப்பு, சிறுபடகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

65 0 0
இலங்கை செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; ஒருவர் கொ*லை.!

தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (28) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் 35 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை…

55 0 0
இலங்கை செய்திகள்

கனிம வள அகழ்வுக்கு புதிய நடைமுறை.!

மன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிம வளங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையில் நடைமுறைகள் குறித்து விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட…

46 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

64 0 0