உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அடுத்த ஜனாதிபதி மொட்டு வேட்பாளரே.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
39 பார்வைகள்

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நிறுத்தப்படும் வேட்பாளரே நிச்சயம் வெற்றி பெற்று அடுத்த ஜனாதிபதியாவார்” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய ஆட்சியின் கீழ் நாட்டில் ஜனநாயக உரிமைகள் படிப்படியாக இல்லாதொழிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் மீது அடக்குமுறைகள் ஏவிவிடப்படுகின்றன. இத்தகைய ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து அணிதிரள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

எதிரணிக்குரிய பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தம்மால் முடிந்தவரை செம்மையாக நிறைவேற்றி வருகின்றது. தற்போதைய அரசைத் தேர்தல் மூலம் தோற்கடிப்பது எமக்குச் சவாலான விடயமே அல்ல.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையின் கீழ் களமிறக்கப்படும் வேட்பாளரே இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என்பது உறுதி. அதற்கான மக்கள் பலம் இப்போதும் எங்களிடமே உள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

47 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

59 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

39 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0