தனியார் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!
கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொலகொட பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) இரவு கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மொலகொட பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.