உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பெண்கள் கடத்தப்பட்டு கொ*லை; ஏழாவது சந்தேகநபருக்கு தடுப்புக்காவல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயக்க மருந்து கொடுத்து பெண்கள் கடத்தப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டு கிணறுகளில் வீசப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மயக்க மருந்துகளை வழங்கியதாக தெரிவிக்கப்படும் ஏழாவது சந்தேக நபரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் விசாரணை செய்வதற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பிலிருந்து சென்ற கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கொழும்பு, வத்தளை பகுதியில் வைத்து மயக்க மருந்துகளை விநியோகம் செய்த நபரை கைது செய்திருந்தனர்.

விசாரணையின் பின்னர் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் நேற்று மாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.தர்சினி அவர்களின் அறையில் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது ஏழாவது சந்தேக நபருடன் முதலாவது சந்தேக நபரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது கொக்கட்டிச்சோலை பொலிஸார் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக ஏழாவது சந்தேக நபரை எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதியளித்தார்.

கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாபுலை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடனும் ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் ஒருவர் சடலமாக கிணற்றில் இருந்தும் இளம் தாயின் 3 வயது சிறுமி கொத்தியாபுலை வயல் பகுதியில் உயிருடனும் மீட்கப்பட்டனர்.

இச் சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி வர்ன ஜெயசுந்தரவின் வழிகாட்டலில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் நேரடி கண்காணிப்பில் கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணை முன்னெடுத்தனர்.

இதன்போது வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் அவரது 34 வயதுடைய கணவர் அவரது 22 வயதுடைய தம்பியார் மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய ஊறணி, திருகோணமலை வீதிகளைச் சேர்ந்த இரு நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் மயக்க மருந்துகளைப் பெற்றுக்கொண்ட முச்சக்கரவண்டி சாரதி உட்பட ஆறு பேரை 24 மணித்தியாலயத்தில் பொலிசார் கைது செய்துடன் இரு முச்சக்கரவண்டிகள், கார் ஒன்று மற்றும் கோடரி, கூரிய ஆயுதங்களையும் மீட்டனர்.

இது தொடர்பான தொடர் விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மற்றும் கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

47 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

59 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

39 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0