உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தடைசெய்யப்பட்ட சட்டவிரோத பெருமளவு வலைகள் கைப்பற்றல்!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

கடற்றொழில் அமைச்சினால் தடை செய்யப்பட்ட சட்டவிரோத பெருமளவு வலைகள் கடற்படையினரின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டதாக மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் என்.ஸ்ரீ ரஞ்சன் தெரிவித்தார்

மட்டக்களப்பு வாவியில் பிள்ளையா ரடி, சத்துருக்கொண்டான், நாவற்காடு ஆகிய இடங்களிலேயே மேற்படி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.தங்கூஸ் வலைகள்,முக்கூட்டு வலைகள், தொட்டாண்டி வலைகள் ஆகிய தடை செய்யப்பட்ட வலைகளே இவ்வாறு கடற் படையினரின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது

கைப்பற்றப்பட்ட தடை செய்யப்பட்ட சட்டவிரோத வலைகளை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது குறித்த வலைகளை அழிக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.தர்ஷினி உத்தரவிட்டுள்ளார்கைப்பற்றப்பட்ட வலைகளின் பெறுமதி சுமார் மூன்று லட்சம் ரூபாய் என திணைக்கள அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

47 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

59 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

39 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0