போதைப்பொருட்களுடன் இருவர் கைது.!
கணேமுல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் பொல்லத்த மற்றும் கணேமுல்லை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 26 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 470 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 230 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், சந்தேக நபர்கள் பயணித்த உந்துருளிகளும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக கணேமுல்லை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் கணேமுல்லை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.