உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
37 பார்வைகள்

மண்டபம் வடக்கு கடல் வழியாக படகில் இலங்கைக்கு கடத்த குடோன் ஒன்றில் பதுக்கி வைப்பதற்காக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட இந்திய மதிப்பில் சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா, சமையல் மஞ்சள், ஏலக்காய், நிலக்கரி, வெளிநாட்டு சிகரெட், பூச்சிகொல்லி உள்ளிட்ட கடத்தல் பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்துள்ளதோடு குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பிடித்து மரைன் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே நேற்று (28) இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை சாவடியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக சென்ற வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த வாகனத்தில் சமையல் மஞ்சள் மூட்டைகள் இருந்தது தெரியவந்ததையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மஞ்சள் மூட்டைகளுக்கான ரசீதை வாகன ஓட்டுனரிடம் கேட்டுள்ளனர்.

சரக்கு வாகன ஓட்டுனரும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் வாகனம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் சரக்கு வாகனத்தில் மஞ்சள் மூட்டைகள் அதிகளவு எடுத்து செல்வது குறித்து மரைன் காவல் ஆய்வாளர் ஜான்சிராணிக்கு தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில் அந்த சரக்கு வாகனத்தை பின் தொடர்ந்து வந்த மரைன் பொலிஸார் மண்டபம் வடக்கு கடற்கரை அருகே உள்ள டி நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் வாகனத்தில் உள்ள பொருட்களை இறக்கி பதுக்கி வைத்துக் கொண்டிருந்த போது மரைன் பொலிஸார் சுற்றிவளைத்தனர்.

பின்னர் மரைன் பொலிஸார் சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கஞ்சா இரண்டு கிலோ கஞ்சா, இரண்டு டன் எடை கொண்ட சமையல் மஞ்சள் மூட்டைகள், பத்தாயிரம் வெளிநாட்டு சிகரெட்கள், 308 கிலோ நிலக்கரி, 100 பண்டல் பீடி, 56 லிட்டர் பூச்சிக்கொல்லி, 10 கிலோ ஏலக்காய், 60 கிலோ மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வாகனத்துடன் கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்த மரைன் பொலிஸார் சரக்கு வாகனத்தின் உரிமையாளர் மற்றும் அந்த குடோனின் உரிமையாளர் இருவரையும் பிடித்து மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரைன் பொலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடத்தல் பொருட்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டு குடோனில் பதுக்கி வைத்து பின்னர் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் சர்வதேச மதிப்பு 50 இலட்சம் இருக்கலாம் என மரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமையல் மஞ்சள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கடல் வழியாக இலங்கைக்கு அடிக்கடி கடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது முதல் முறையாக நிலக்கரி மூட்டை பிடிபட்டுள்ளது பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

சீமானுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக, சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த…

61 0 0
இந்திய செய்திகள்

குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை – உயர்நீதிமன்றத்தில் தவெக விளக்கம்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கில், குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என விஜய்…

35 0 0
இந்திய செய்திகள்

தவெக கூட்டணிக்குள் உட்கட்சிப்பூசல்?

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியை ‘தேசிய வெற்றி கழகம்’ என மாற்றி 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தத்…

86 0 0
இந்திய செய்திகள்

திருமாவளவனின் அறிவிப்பு : கண்டுகொள்ளாத விஜய்!

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில், தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்புக்கு விஜய் பதில் கூறாமை தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்ந்து…

61 0 0