உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மின் கட்டணம் உயருமா? – நாளை இறுதித் தீர்மானம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான தனது இறுதித் தீர்மானத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நாளை திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டுக்காக அனைத்து நுகர்வோர் பிரிவுகளுக்கும் 13.56 சதவீத கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது நிலவும் கடும் வறட்சி, தரமற்ற நிலக்கரி விநியோகம் மற்றும் மின் உற்பத்திக்காக அதிகளவில் டீசலைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளமை போன்ற காரணங்களால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது என்று மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது எதிர்பார்க்கப்படும் வருமானத்தை விட, மேலதிக செயற்பாட்டுச் செலவுகளுக்காக மாத்திரம் சுமார் 15.8 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதால் இந்த விலை உயர்வு கோரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் லலித் சந்திரலால்,

“மின்சார சபை சமர்ப்பித்துள்ள தரவுகள் தற்போது தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கட்டணத்தை அதிகரிப்பதா அல்லது தற்போதைய நிலையிலேயே பேணுவதா என்பது குறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்படும். எனினும், மின்சார சபையின் கடந்தகாலக் கடன்கள் எவையும் புதிய கட்டணக் கணிப்பீட்டில் சேர்க்கப்பட மாட்டாது என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன்.” – என்றார்.

உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவிய போதிலும், தற்போதைக்கு நாட்டில் திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் எதுவும் அமுல்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட உடன்படிக்கையின் ஓர் அங்கமான காலாண்டு விலை நிர்ணய பொறிமுறையின் கீழேயே இந்தத் திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

40 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

64 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

70 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

50 0 0