உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தனியார் பேருந்து நடத்துநருக்கு பணித்தடை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
42 பார்வைகள்

பயணிகளுடன் தரக்குறைவாக நடந்துகொண்டமை உள்ளிட்ட இருவேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தனியார் பேருந்து நடத்துநருக்கு 8 நாட்கள் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 07.03.2026 அன்று வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் திடீர்பரிசோதனை உத்தியோகத்தர்கள், பேருந்தில் பரிசோதனையில் ஈடுபட்டபோது, குற்றப்பத்திரிகை வழங்க அனுமதிப்பத்திரத்தைக் கோரிய அதிகாரிகளை குறித்த நடத்துநர் அவமதித்துள்ளார். அத்துடன், 26.03.2026 அன்று காலை பரந்தனிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சேவையின்போது அவர் தரக்குறைவாகப் பேசியுள்ளமையும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், குறித்த நபரின் சுய ஒழுக்க மீறல் மற்றும் வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் நடத்துநராகவோ சாரதியாகவோ கடமையாற்றத் தகுதியற்றவர் என இனங்காணப்பட்டமையால், அவருக்கு வடக்கு மாகாணத்தில் எவ்வித பயணிகள் பேருந்திலும் கடமையாற்ற முடியாதவாறு 8 நாட்கள் தொடர்ச்சியான பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையை மீறிச் செயற்பட்டால், குறித்த நபருக்கும் அவரைச் சேவையில் ஈடுபடுத்தும் பேருந்து உரிமையாளருக்கும் எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் இவ்வாறான ஒழுக்க மீறல்கள் மற்றும் விதிமீறல்களுக்கு எதிராக முன்னரும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் எவ்வித அசௌகரியங்களை எதிர்கொண்டாலோ அல்லது நடத்துநர்கள் மற்றும் சாரதிகளின் தரக்குறைவான செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டாலோ, அது தொடர்பான முறைப்பாடுகளை உரிய ஆதாரங்களுடன் (ஒளிப்படங்கள் அல்லது காணொளிகள்) 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் அறிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

60 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

67 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

45 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

69 0 0