உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அரசியல் தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாடு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
48 பார்வைகள்

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்பட இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் தீர்மானித்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற இரு தரப்புக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,
“இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் இது மூன்றாவது சந்திப்பாகும். இரு தரப்புக்கும் இடையே தொடர்ச்சியான ஒருங்கிணைப்பைப் பேணுவதற்காக 9 பேர் கொண்ட ‘இணைப்புக் குழு’ ஒன்றை அமைக்கத் தீர்மானித்துள்ளோம்.

இந்தக் குழுவில் தமிழரசுக் கட்சியின் சார்பில் நானும் (எம்.ஏ.சுமந்திரன்), தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம் ஆகிய மூவர் அங்கம் வகிப்போம். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் 6 பிரதிநிதிகள் இணைக்கப்படுவர். இந்த ஒன்பது பேர் கொண்ட குழுவே இரு தரப்புக்கும் இடையிலான அரசியல் நகர்வுகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும். அத்துடன் மாதந்தோறும் இவ்வாறான சந்திப்புகளை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாக சட்டத்தரணிகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் எமது இரு தரப்பினரும் கலந்துகொண்டோம். தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான அடிப்படைக் கோட்பாடுகளை வரையறுப்பதுடன், அது சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான ஒரு ‘சமூக ஒப்பந்தமாக’ அமைய வேண்டும் என்பதில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதற்கான வரைவைத் தயாரிக்கும் பணிகள் சட்டத்தரணிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எரிபொருள் நெருக்கடி காரணமாகப் பிற்போடப்பட்ட இதற்கான அடுத்தகட்டக் கூட்டம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கின்றோம்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடனும் இணைந்து, ஒருமுகப்பட்ட நிலைப்பாட்டை எடுப்பதற்கான முயற்சிகளில் முழுமையாக ஈடுபட இன்றைய கூட்டத்தில் தீர்மானித்துள்ளோம். தமிழ்த் தரப்புகள் சிதறி நிற்காமல், ஒருமித்த குரலில் அரசியல் தீர்வை வலியுறுத்துவதற்கான நடைமுறைகளை முன்னெடுப்போம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

60 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

67 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

45 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

69 0 0