போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!
பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுஹே வீதி பகுதியில் நேற்று சனிக்கிழமை (28) மாலை ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 01 கிலோகிராம் 642 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.