உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்கள்; சிறுவன் உட்பட மூவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
37 பார்வைகள்

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை – புல்மோட்டை வீதியில், நேற்று சனிக்கிழமை (28) மதியம் இடம்பெற்ற விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் திரியாய பகுதியைச் சேர்ந்த 65 மற்றும் 75 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திருகோணமலையிலிருந்து குச்சவெளி நோக்கி பயணித்த கேப் ரக வாகனமொன்று, எதிரே வந்த உந்துருளியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த உந்துருளி ஓட்டுநரும் அதில் பயணித்தவரும் குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, குடாஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தணமல்வில – வெல்லவாய வீதியில், நேற்று சனிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் கொட்டியாகல பகுதியைச் சேர்ந்த 07 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெல்லவாயவிலிருந்து தணமல்வில நோக்கி பயணித்த லொறி ஒன்று, எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் பலத்த காயமடைந்து தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் குடாஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

60 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

67 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

45 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

69 0 0