உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

செல்வச்சந்நிதியில் இருந்து கதிர்காமத்திற்கான புனித பாதயாத்திரை மே மாதம் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
46 பார்வைகள்

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – கதிர்காமத்திற்கான பாரம்பரிய புனித பாதயாத்திரை, ஜெயா வேல்சாமி தலைமையில் எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

ஸ்ரீ கதிர்காம கந்தன் ஆலயத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற ஆடிவேல் விழா மகோற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

15 தினங்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள இத்திருவிழா, ஜூலை மாதம் 29 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

இலங்கையின் மிக நீண்ட இந்தப் பாதயாத்திரையில் கலந்துகொள்ள விரும்பும் அடியார்கள், ஜெயா வேல்சாமியுடன் 077-8386381 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு தமது பங்கேற்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இம்முறை 95 யாத்திரிகர்கள் மாத்திரமே உள்வாங்கப்படவுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

செல்வச்சந்நிதி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகும் இந்தப் பாரம்பரிய பாதயாத்திரை, வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய 3 மாகாணங்களையும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை ஆகிய 7 மாவட்டங்களையும் கடந்து செல்லவுள்ளது.

சுமார் 52 நாட்கள், 572 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட இந்தப் பயணம், இலங்கையின் மிக நீண்ட கதிர்காமப் பாதயாத்திரையாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

53 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

53 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

58 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

65 0 0