உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பொலிஸ் அதிகாரி போல் நடித்து வர்த்தகர்களை மிரட்டி பணம் பறிப்பு; ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

பொலிஸ் அதிகாரி போல் நடித்து, வர்த்தகர்களை மிரட்டி பணம் பறித்து வந்த நபர் ஒருவர், போதைப்பொருளுடன் பாணந்துறை வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அம்பலங்கொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எனத் தன்னை அடையாளப்படுத்தி, வட்ஸ்அப் ஊடாக தங்கும் விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய, நேற்று புதன்கிழமை (25) மாலை களினிகம அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 25 கிராம் 620 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல், கொள்ளை மற்றும் பணம் பறித்தல் போன்ற குற்றங்களுக்காக சிறைத் தண்டனை அனுபவித்தவர் என்பது தெரியவந்துள்ளது.

அம்பலங்கொட, இரத்தினபுரி, ஹொரணை, பாணந்துறை, மாரவில மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள வர்த்தகர்களை இவர் ஏமாற்றி பணம் பறித்துள்ளமை விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

இவ்வாறு பொலிஸ் அதிகாரி போல் நடித்து மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது போன்ற அச்சுறுத்தல்கள் நேர்ந்தால் உடனடியாக 119 அல்லது 118 ஆகிய அவசர இலக்கங்களுக்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை வலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

53 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

53 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

58 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

65 0 0