சற்றுமுன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வாவியில் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டு மீனவர்களின் உதவியுடன் சடலம் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கல்லடி பாலத்திலிருந்து குதித்திருக்கலாம் எனவும் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
