வட லண்டனில் அம்பியூலன்ஸ் தீவைப்பு: இருவர் கைது.!
வடக்கு லண்டனில் யூத தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு அம்பியூலன்ஸ் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யூத தொண்டு நிறுவனமாக ஹட்சோலாவுக்குச் சொந்தமான நான்கு அம்பியூலன்ஸ்கள் கடந்த திங்கட்கிழமை அதிகாலை கோல்டர்ஸ் கிரீனில் தீக்கிரையாக்கப்பட்டன.இதைத் தொடர்ந்து, லண்டன் பெருநகர காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு இது குறுத்த விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே இன்று காலை, வடமேற்கு லண்டனில் 47 வயதான ஒருவரும், மத்திய லண்டனில் 45 வயதான மற்றொருவரும் பெருநகரப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் அம்பியூலன்ஸ் வாகனங்களுக்கு தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவ்விருவரும் லண்டன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, தற்போது காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, தீ வைப்புத் தாக்குதலில் அழிக்கப்பட்ட யூத சமூக அமைப்புக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் வாகனங்களுக்கு பதிலாக இங்கிலாந்து அரசாங்கத்தால் கடனாக நான்கு மாற்று அம்பியூலன்ஸ்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளன.
நிரந்தர மாற்று அம்பியூலன்ஸ்கள் வழங்கப்படும் வரை, ஆரம்பத்தில் கடனாகப் பெறப்படும் நான்கு மாற்று வாகனங்களுக்கான செலவை அரசாங்கம் ஏற்கும் என்று இங்கிலாந்து அரசாங்கத்தின் சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் கூறியுள்ளார்.