உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உயிர்த்த ஞாயிறு சம்பவத்தில் பிரதான சூத்திரதாரிகளைக் கண்டறிந்தால் மட்டுமே முழு நீதி கிடைக்கும்

இலங்கை செய்திகள் 40 நிமிடங்கள் முன்
59 பார்வைகள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் சதித்திட்டம் தீட்டியவர்களுக்கும், அதற்கு உதவி புரிந்தவர்களுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து கொழும்பு பேராயர் இல்லம் தனது மனநிறைவை வெளிப்படுத்தியுள்ளது. அதேவேளை, இந்த நீதி விசாரணைகள் மற்றும் தீர்ப்புகள் முழுமையான நீதியை இன்னும் வழங்கவில்லை என்ற கவலையையும் கொழும்பு பேராயர் இல்லம் வெளிப்படுத்தியுள்ளது.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கொழும்பு பேராயர் இல்லத்தின் வெகுஜன தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ, தற்போதைய தீர்ப்பானது தாக்குதலுக்கு உதவிய மற்றும் சதி செய்தோரில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்று சுட்டிக்காட்டினார். இது முழுமையான நீதிக்கான தேடலில் ஒரு ஆரம்ப கட்டமே தவிர, முடிவு அல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்தக் கொடூரத் தாக்குதலின் பின்னணியில் இருந்து கொண்டு திரைமறைவில் காய்களை நகர்த்திய பிரதான சதித்திட்டக்காரர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“உண்மையான மூளையாகச் செயற்பட்டவர்கள் அடையாளம் காணப்படாத வரை பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆன்ம அமைதியும் முழுமையான நீதியும் கிடைக்காது என்பதே கத்தோலிக்க திருச்சபையின் நிலையாகும்.

இந்தக் கொடூர சம்பவத்துக்கு நீதி கோரும் பணியில் கத்தோலிக்க திருச்சபையும் பாதிக்கப்பட்ட மக்களும் தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, விசாரணைகள் மமதைகளில் சிக்காமல் அல்லது திசைதிருப்பப்படாமல் நேர்மையான முறையில் தொடர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

எனவே, நீதித்துறையின் தற்போதைய தீர்ப்புகளை வரவேற்கும் அதேவேளையில், இதன் தொடர்ச்சியாகப் பிரதான குற்றவாளிகளை முழுமையாக வெளிக்கொணர்வதற்குச் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளும் அரசும் தொடர்ந்தும் உரிய துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” – என்றும் கொழும்பு பேராயர் இல்லம் கோரிக்கை விடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை மின்னேரியாவில் சட@லமாக மீட்பு!

வவுனியா – கோவில்குளம் இந்துக் கல்லூரி ஆசிரியரும், கலை இலக்கிய ஆர்வலருமான செல்வி வனிதா சேனாதிராஜா (வயது 41) பொலனறுவை, மின்னேரியா பகுதியில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

71 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கான பேச்சு திடீரென இடைநிறுத்தம்!

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 25ஆம் திகதி இந்தியாவில் நடைபெறவிருந்த இரு தரப்புப் பேச்சு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்பரப்புக்குள்…

68 0 0
இலங்கை செய்திகள்

இது ஜனநாயகத்தின் கொ@லைகார அரசு – சஜித் கடுமையாகச் சாடல்

சமூக ஒப்பந்தம் மற்றும் முறைமை மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் ஊடாக நீதிமன்றத்தின் சுதந்திரத்தைச் சீரழித்து, ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்தை…

68 0 0
இலங்கை செய்திகள்

பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

இலங்கையின் நீண்டகால வரலாற்றைக் கொண்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக புதிய சட்டக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தும் வகையில் “பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டமூலம்”…

61 0 0